கூகுள் நிறுவனமானது Google Pixel C எனும் புத்தம் புதிய டேப்லட்டினை இவ்வருட இறுதியில் அறிமுகம் செய்யவிருப்பதாக ஏற்கணவே அறிவித்திருந்தது. இந் நிலையில் குறித்த டேப்லட் எதிர்வரும் 8 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த டேப்லட் ஆனது 10.2 அங்குல அளவு, 2560 x 1800 Pixel Resolution உடைய தொடுதிரையினையும், Nvidia Tegra X1 Processor, பிரதான நினைவகமாக 3 GB RAM இனையும் கொண்டுள்ளது. கூகுள் இறுதியாக அறிமுகம் செய்த Android 6.0 Marshmallow இயங்குதளத்தில் செயல்படக்கூடிய இந்த டேப்லட்டில் 32 GB மற்றும் 64 GB சேமிப்பு கொள்ளளவுடைய இரு பதிப்புக்களாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதில் 32 GB சேமிப்பு கொள்ளளவுடையது 499 டொலர்களாகவும், 64 GB சேமிப்பு கொள்ளளவுடையது 599 டொலர்கள் உடையதாகவும் காணப்படுகின்றது. |
Tuesday, 29 December 2015
Home
Unlabelled
விரைவில் அறிமுகமாகின்றது Google Pixel C டேப்லட்
No comments:
Post a Comment