முன்னணி மொபைல் சாதன வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான சம்சுங் சில தினங்களுக்கு முன்னர் Samsung Galaxy View எனும் புத்தம் புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது. இந்த டேப்லட் ஆனது WiFi தொழில்நுட்பத்தினை மாத்திரம் கொண்டதாகவும், WiFi மற்றும் LTE தொழில்நுட்பத்தினைக் கொண்டதாகவும் இரு பதிப்புக்களை வெளியிட்டுள்ளது. இவற்றில் WiFi தொழில்நுட்பதி்னைக் கொண்ட டேப்லட்டின் விலை 599 டொலர்கள் ஆகவும், WiFi மற்றும் LTE தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட் 699 டொலர்களாகவும் காணப்படுகின்றது. மேலும் இந்த டேப்லட்டின் சிறம்பம்சங்களாக 18.4 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரை, 1.6GHz வேகத்தில் செயல்படக்கூடிய Oocta Core Processor, பிரதான நினைவகமாக 2GB RAM என்பனவற்றுடன் சேமிப்பு நினைவகமாக 32GB மற்றும் 64GB தரப்பட்டுள்ளன. தவிர Android 5.1 Lollipop இயங்குதளத்தில் செயல்படக்கூடியதாகவும், 5700 mA மின்கலத்தினை உள்ளடக்கியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. |
Tuesday, 29 December 2015
Home
Unlabelled
சம்சுங் அறிமுகம் செய்யும் நவீன டேப்லட்
No comments:
Post a Comment