மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது புதிய இயங்குதளமான விண்டோஸ் 10 இனை இவ்வருடம் ஜுலை மாதம் 29 ஆம் திகதி அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது சுமார் 110 மில்லியன் வரையான சாதனங்களில் இந்த இயங்குதளம் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இன்னும் இரண்டு தொடக்கம் மூன்று ஆண்டுகளுக்குள் இந்த எண்ணிக்கையானது ஒரு பில்லியன் வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் மைக்ரோசொப்ட் நிறுவனம் புதியதாக அறிமுகம் செய்த இணைய உலாவியான Microsoft Edge ஊடாக இதுவரை 650 பில்லியன் இணையப் பக்கங்கள் பார்வையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
Thursday, 31 December 2015
Home
Unlabelled
புதிய மைல் கல்லை எட்டியது விண்டோஸ் 10
No comments:
Post a Comment