இயங்குதள வடிவமைப்பில் முன்னணியில் திகழும் மைக்ரோசொப்ட் நிறுவனம் அண்மையில் விண்டோஸ் 10-ஐ அறிமுகம் செய்திருந்தது. இவ் இயங்குதளத்திற்கான அப்டேட் மற்றும் ஏனைய உதவிகள வழங்குவதை 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது குறித்த இயங்குதளத்திற்கான அன்டி வைரஸ் அப்டேட்கள், குறைபாடுகள் நீக்குதல், மேம்படுத்தல்கள் என்பவற்றினை நிறுத்தவுள்ளது. இதேவேளை விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கான அப்டேட் மற்றும் உதவிகளை 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதியுடனும், விண்டோஸ் 8.1 இயங்குதளத்திற்கான அப்டேட், உதவிகளை 2023 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதியுடனும் நிறுவத்தவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் புதிதாக அறிமுகம் செய்யப்படும் விண்டோஸ் இயங்குதளம் 2025 ஆம் ஆண்டிற்கு பின்னர் பாவனையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. |
Thursday, 31 December 2015
Home
Unlabelled
2025 ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது Windows 10 இயங்குதளத்தின் சகாப்தம்
No comments:
Post a Comment