சம்சுங் நிறுவனம் Galaxy View எனும் 18.4 அங்குல அளவுடைய திரையினைக் கொண்ட டேப்லட்டினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் இந்த டேப்லட் தொடர்பான படங்கள், மற்றும் தகவல்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன. இதன்படி முதன் முறையாக வடிவமைக்கப்படும் 18.4 அங்குல தொடுதிரையானது 1920 x 1080 Pixels Resolution இனைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. இவை தவிர Samsung Exynos Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 32GB சேமிப்பு நினைவகம், 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. |
Tuesday, 29 December 2015
Home
Unlabelled
Samsung அறிமுகம் செய்யவுள்ள Galaxy View தொடர்பான தகவல்கள் வெளியாகின
No comments:
Post a Comment