கூகுள் நிறுவனம் குவாண்டம் (Quantum) தொழில்நுட்பத்தினைக் கொண்ட கணனிகளை வடிவமைக்கும் திட்டம் தொடர்பாக ஏற்கணவே தகவல் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் நாசா விண்வெளி ஆய்வு நிலையத்துடன் இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டம் தொடர்பாக தற்போது மேலும் சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி இவை சாதாரண மடிக்கணனிகளை விடவும் 100 மில்லியன் மடங்கு வேகம் கூடியவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குவாண்டம் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் முதலாவது கணினி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்த கருத்து ஒன்றில் “நாம் அனைவரும் எதிர்வரும் 10 ஆண்டுகளில் குவாண்டம் கணினிகளிலேயே பணிபுரிவோம்” என்று குறிப்பிட்டிருந்தமை தெரிந்ததே. |
Tuesday, 29 December 2015
Home
Unlabelled
கூகுளின் மில்லியன் மடங்கு வேகம் கூடிய கணனி
No comments:
Post a Comment