ஸ்மார்ட்போனிற்காக பல வகை துயிலெழுப்ப உதவும் அலார செயலிகள் இருக்கின்றன. இவற்றை எல்லாம் ஏமாற்றி விட்டு நாம் மீண்டும் தூங்க சென்றுவிடுவோம். ஆனால் தற்போது வந்திருக்கும் புதிய அலார செயலி உங்களை அப்படி மீண்டும் தூங்குவதற்கு எளிதில் அனுமதிக்காது. அதனால் தான் இந்த செயலி தன்னை தானே எரிச்சலுட்டக்கூடிய துயிலெழுப்பும் செயலி என வர்ணித்துக்கொள்கிறது. இந்த அப்பிளிகேஷன் பெயர் Alarmy. இதில் அலாரம் ஒலித்த பின் எளிதாக இதனை நிறுத்திவிட முடியாது. போனில் ஒரு ஒளிப்படத்தை எடுத்த பின் தான் இது மெளனமாகும். அதுவரை இது ஒலித்துக் கொண்டே இருக்கும். இதனால் தான் இந்த ஆப்பிளிகேஷன் தன்னை எரிச்சலுட்டக்கூடிய துயிலெழுப்பும் செயலி என்று சொல்லிக் கொள்கிறது. அலாரமும் வைத்து விட்டு அதை அவர்களுக்கே தெரியாமல் அணைத்து விட்டு தூங்குபவர்களுக்காகவே இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. |
Thursday, 31 December 2015
Home
Unlabelled
இனிமேல் தூங்க முடியாது! துயிலெழுப்ப உதவும் புதிய அலார செயலி (வீடியோ இணைப்பு)
No comments:
Post a Comment