Microsoft நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Windows 8 இயங்குதளத்தில்Windows Store எனும் வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வசதியை தேவை ஏற்படின் செயலிழக்கச் செய்ய முடியும். அதற்கான வழிமுறைகள் கீழே தரப்படுகின்றன.
1. Windows + R ஆகிய கீக்களை அழுத்தி Run விண்டோவினை தோற்றுவித்து அதனுள் gpedit.msc என டைப் செய்து Enter செய்க.
2. தோன்றும் window-வில் User ConfigurationAdministrative TemplatesWindows Components என்பதனை தேர்வு செய்க.
3. பின்னர் Windows Components இனுள் Store என்பதனுள் காணப்படும் Windows Storeமேல் double click செய்க.
4. அடுத்து தோன்றும் window-வில் Enabled என்பதை தெரிவு செய்து OK செய்யவும்.
அவ்வளவு தான் இப்போது windows store உங்கள் கணினியில் செயல் இழந்து இருக்கும்.
No comments:
Post a Comment