நாடு ஆவலுடன் எதிர்பார்த்த "ரிலையன்ஸ் ஜியோ" 4ஜி செல்போன் சர்வீஸ் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் தொடங்குகிறது.
லைஃப் [LYF] என்ற பெயரில் ஜியோ வழங்கும் செல்போன் வாங்கினால், முதல் 3 மாதங்களுக்கு எல்லாமே இலவசம். எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம்.
டேட்டா டவுன்லோட் செய்யலாம்.
அப்லோட் செய்யலாம்.
வரம்பு கிடையாது.
லைஃப் போன் இல்லாதவர்கள் கவலைப்பட தேவையில்லை.
அவர்கள் மட்டுமல்ல. எந்த கம்பெனியின் 4ஜி செல்போன் வைத்திருந்தாலும் சரி, அவர்கள் ஜியோவின் 4ஜி சிம் கார்டை இலவசமாக பெறலாம்.
ஏர்டெல், வோடபோன், ஐடியா என நீங்கள் எந்த கம்பெனியின் கஸ்டமராக இருந்தாலும் சரி, உங்களுக்கு ஜியோ சிம் இலவசமாக கிடைக்கும்.
உங்கள் போனில் 2 சிம் ஸ்லாட் இருந்தால் ஒன்றில் ஜியோ சிம்மை போட்டுக் கொள்ளலாம்.
ஜியோவின் மின்னல் வேக இயக்கத்தை பார்த்து மிரண்டு போய் நீங்கள் மற்ற கம்பெனி சேவையை துண்டித்து ஜியோவில் ஐக்கியம் ஆவீர்கள் என முகேஷ் அம்பானி எதிர்பார்க்கிறார்.
“ஒரு செல்போன் மூலம் இத்தனையும் சாத்தியமா..? என்று மக்கள் அதிசயிக்க வேண்டும்.
இத்தனையும் வழங்கும் சேவைக்கு இவ்வளவுதான் கட்டணமா என்று மக்கள் ஆச்சர்யப்பட வேண்டும். அப்போது அவர்கள் எதிர்பார்க்காத மேலும் பல சேவைகளை இலவசமாக வழங்க வேண்டும். இதுதான் என் ஆசை” என்கிறார் முகேஷ்.
லைஃப் செல்போன்கள் இப்போது 2,999 ரூபாய் முதல் 19,599 வரை விலையில் கிடைக்கின்றன.
நிலம், நீர், காற்று, நெருப்பு என்ற 4 பிரிவுகளில் 14 போன்களை ஜியோ விற்பனை செய்கிறது.
ஜியோவின் யுஎஸ்பி என்ன தெரியுமா..?
லோக்கல், எஸ்டிடி கால்கள் முற்றிலும் இலவசம்..
ஆமாம். இந்தியாவுக்குள் எத்தனை கால் வேண்டுமானாலும் பேசலாம். கட்டணமே கிடையாது.
டேட்டாவுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க ஜியோ முடிவு செய்துள்ளது.
அதுவும் மற்ற கம்பெனிகள் நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தைவிட மிக மிக குறைவாக. சரியாக சொன்னால் 96 சதவீதம் குறைவாக.
அதாவது மற்ற 4ஜி கம்பெனிகள் 10 ஜிபிக்கு 900 முதல் 1,150 ரூபாய் கட்டணம் வைத்துள்ள நிலையில், ஜியோ வெறும் 97 ரூபாய் கேட்கிறது.
சுதந்திர தினத்தில் ரிலையன்ஸ் ஜியோ தொடங்கும் புதிய தகவல் தொடர்பு புரட்சியை ரசித்து அனுபவிக்க தயாராகுங்கள்.
No comments:
Post a Comment