ஸ்மார்ட் கைப்பேசி உலகில் அப்பிள், சம்சுங் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக மூன்றாம் நிலையில் காணப்படும் மிகப்பெரிய நிறுவனமாக Huawei விளங்குகின்றது. சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் இந் நிறுவனம் இதுவரை காலமும் அமெரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகளில் தனது ஸ்மார்ட் கைப்பேசிகளை சந்தைப்படுத்தி வந்தது. இந்நிலையில் அடுத்த வருடம் முதல் அமெரிக்காவிலும் தனது சந்தைப்படுத்தலை விரிவாக்கம் செய்ய எண்ணியுள்ளது. இவ் விரிவாக்கத்திற்காக Mate 8 மற்றும் Honor 5X ஆகிய கைப்பேசிகளை அடுத்த வருடம் அமெரிக்காவில் அறிமுகம் செய்யவுள்ளது. அதனைத் தொடர்ந்து தனது ஸ்மார்ட் கைக்கடிகாரங்களையும் அங்கு அறிமுகம் செய்ய Huawei நிறுவனம் எண்ணியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
Friday, 1 January 2016
Home
Unlabelled
அமெரிக்க சந்தைக்குள் காலடி பதிக்கும் Huawei
No comments:
Post a Comment