சீனாவின் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பயன்பாடான வி-சாட்டின் மூலம் பயனர்களை ஈர்க்க வழி செய்து அவர்களது மொபைல் சாதனத்தினை பணப்பையாக மாற்றும் விதம் சேவை வரி அம்சத்தை துவக்கியுள்ளது . ஆகவே மொபைலின் உதவியுடன் மக்கள் பணத்தை நண்பர்களுடனும் உறவினர்களுடனும் உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளலாம்.
டெபிட் கார்டு அல்லது கிரடிட் கார்டின் பின் எண்களை மாஸ்டர் கார்டின் பாதுகாப்பு நிறுவனம் பரிசோதனை செய்த பின்பு அதனை வி-சாட் பயன்பாட்டில் சேமித்து வைக்கப்டுகிறது. திடீரென பணப்பையை மறந்து விட்டாலோ அல்லது ATM கார்டினை மறந்து வைத்து விட்டாலோ அந்த மாதிரியான சூழ்நிலைகளில் வீ-சாட் நமக்கு கை கொடுக்கும். இந்த பயன்பாடு பிரிட்டிஷ் பவுண்ட், ஹாங்காங் டாலர், அமெரிக்க டாலர், ஜப்பனீஸ் யென், கனடா டாலர், ஆஸ்திரேலிய டாலர், யூரோ, நியூசிலாந்து டாலர் மற்றும் கொரிய வான் போன்ற அனைத்து விதமான பணத்திற்கும் ஆதரவளிக்கும்.நாம் யாருக்கு பணத்தை வழங்க விரும்புகிறோமோ அவர்களிடம் வங்கி கணக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது ஒரு கூடுதல் மகிழ்ச்சி தரும் அம்சமே!மேலும் அவர்கள் தேவைப்படும் பணத்தை தவிர மிச்சப் பணத்தை சேமித்து வைத்து மற்ற நேரங்களில் உபயோகிக்கலாம்.
மொபைல் சாதனம் எப்படி பணப்பையாக மாறும்?
பணபையில் சாதரணமாக நாம் எப்போதும் ATM-கார்டுகளையும் பணத்தினையும் வைத்திருப்பது போல வி-சாட்டில் நாம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மின்னணு முறையில் பணத்திணை பரிமாறிக் கொள்ளும் முறையை அறிமுகபடுத்தியுள்ளனர். ஆனால் வழக்கமான பணப்பையினை கொண்டு நாம் நண்பருக்கு நினைத்த நேரத்தில் உடனடியாக பணத்தை வழங்க முடியாது.
பணபையில் சாதரணமாக நாம் எப்போதும் ATM-கார்டுகளையும் பணத்தினையும் வைத்திருப்பது போல வி-சாட்டில் நாம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மின்னணு முறையில் பணத்திணை பரிமாறிக் கொள்ளும் முறையை அறிமுகபடுத்தியுள்ளனர். ஆனால் வழக்கமான பணப்பையினை கொண்டு நாம் நண்பருக்கு நினைத்த நேரத்தில் உடனடியாக பணத்தை வழங்க முடியாது.
வீ-சாட் பயன்பாட்டினை பதிவு செய்வது என்பது சுலபமான ஒன்றே! வீ-சாட் பயன்பாடிற்குள் லாகின் செய்து “மீ (Me )” என்ற பட்டனை அழுத்தியபின் “பணப்பை (வாலட் )” என்ற பட்டனை தேர்வு செய்த பின் அடுத்த அடுத்த குறிப்புகளை அதுவே தந்து விடுகிறது .இந்த பயன்பாடு தென் அமெரிக்காவின் 16 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள, பரிசோதிக்கப்பட்ட id-களை கொண்ட அன்றாய்டு மற்றும் ios போன்களை கொண்ட பயனர்கள் மட்டுமே அணுகும்படி செய்துள்ளனர் . இது பல இக்கட்டான பண நெருக்கடி கொண்ட சூழ்நிலைகளின் போது கண்டிப்பாக கை கொடுக்கும். கூடிய விரைவில் அனைத்து நாட்டினருக்கும் இந்த பயன்பாடு கிடைத்தால் ஆபத்து கால சமயங்களில் மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.
No comments:
Post a Comment