முகநூளின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர் பெர்கின் “free basics internet ” என்று அழைக்கபடுகின்ற இலவச இணைய சேவையை பல முன்னணி மொபைல் நிறுவனங்களுடன் சேர்ந்து அறிமுகபடுத்த உள்ளார்.
ப்ரீ பேசிக்ஸ் இன்டர்நெட் சேவை என்றால் என்ன ?
free basics internet- என்ற பயன்பாட்டை நமது மொபைலில் பதிவிறக்கம் செய்த பின் குறிப்பிட்ட சில வலைத்தளங்களை மட்டும் இலவசமாக அணுகிக் கொள்ளலாம்.இதன் மூலம் இந்தியா முழுவதும் சில முக்கிய தளங்களை இலவசமாக அணுகும் முறையை கொண்டு வரும் முயற்சியில் உள்ளனர். ஆகையால் இதுவரை இணையத்தை உபயோகிக்காத பல மில்லியன் பயனர்களை இணையத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ரிலையன்ஸ் கம்யூனிகேசனுடன் கூட்டு சேர்ந்துள்ளனர். ஆனால் இந்த திட்டத்திற்கு இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தற்காலிகமாக சிவப்பு கொடி காட்டி நிறுத்தி வைத்துள்ளது. இலவசமாக கிடைக்கும் இணையத்தை ஏன் அணுகவிடாமால் செய்கிறார்கள்?என மனதில் எழும் கேள்விகளுக்கு பதிலாக இந்த free basics திட்டத்தில் பல குறைபாடுகளை கொண்டுள்ளது.
இந்த ஃப்ரீ பேசிக்ஸ் இன்டர்நெட்டால் நெட்வொர்க் நீயூட்ராலிட்டிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இலவசம் என்ற பெயரில் குறிப்பிட்ட சில வலைதளங்களை மட்டும் இலவசமாக அணுகிக் கொள்ளவும் மற்ற தளங்களுக்குச் சென்று பார்ப்பதற்கும் மற்றும் பதிவிறக்கம், பதிவேற்றம் செய்வதற்கும் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதனால் இலவசம் என்ற பெயரில் மக்களை கவர்ந்து அதன் மூலம் இலாபம் ஈட்டுவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன.கூடவே மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களைப் பற்றியும் தெளிவான தகவல் ஏதும் இல்லாததால் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இந்த சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
மேலும் இதுபோன்ற சேவை அமலுக்கு வந்தால் சாதரணமாக நாம் தற்போது இலவசமாக உபயோகித்துக் கொண்டிருக்கும் பல வலைதளங்களுக்கு கூட கட்டணத்தோடு பார்க்கும் சூழ்நிலை உருவாகலாம்.அதாவது உதாரணமாக குறிப்பிட்ட சில வலைதளங்களுக்கு இலவசமாக அணுகிக் கொள்ள வாய்ப்புகள் அளிக்கப்படும்போது கண்டிப்பாக அனைத்து மக்களும் ஒரு வலைதளத்திலேயே அதிக நேரம் செலவிடுவதால் தானாகவே அதிகளவு பயனர்களின் காரணமாக அந்த குறிப்பிட்ட வலைதளம் மட்டும் அதிக பணத்தை ஈட்டி இலாபத்தின் உச்சிக்கு சென்று விடும். அதே நேரம் மற்றொரு சமூக வலைத்தளத்தை கட்டண சேவையோடு வழங்கினால் சாமானிய மக்களால் அணுக முடியாமல் அதனை பணமுள்ளவர்கள் மட்டுமே அணுகும் நிலை ஏற்படும். இந்த நிலை தொடர்ந்தால் சாதரணமாக இலவசமாக தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வளைதளங்களைக் கூட கட்டணம் செலுத்தியே பெறும் நிலை உண்டாகும்.
இணைய சுதந்திரம் பாதிக்கப்படுமா?
ஆம் , கண்டிப்பாக இணையத்தை பொருத்தவரையிலான தனி மனிதரின் சுதந்திரம் பாதிக்கப்படலாம். ஆம், அதாவது இன்றைய நிலையில் தற்போது விருப்பட்ட வலைதளங்களுக்குச் சென்று பிடித்த செய்திகளை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் நம்மை, எதிர்காலத்தில் குறிப்பிட்ட சில வலைத்தளங்களைத் தவிர மற்ற தளங்களுக்கு செல்ல கண்டிப்பாக கட்டணம் வசூலிக்கப்படும். ஆகையால் நினைத்த நேரத்தில் விரும்பிய தளங்களை அனைவராலும் காண முடியாது. ஒருசில பணமுள்ள மக்கள் மட்டுமே அணுகிக்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. அதாவது இதன் மூலம் இலவசம் என்று கூறிவிட்டு மக்களை பரவசபடுத்திவிட்டு அதன் மூலம் பல கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளையடிக்க வாய்ப்புகள் உள்ளது. இது போன்ற பல கேள்விகளுக்கு பதிலளித்து விட்டு முகநூல் அதன் free basic internet சேவையை நடைமுறைக்கு கொண்டு வருவது சாத்தியமில்லாத ஒன்றே !
No comments:
Post a Comment