ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினைக் கொண்ட மொபைல் சாதனங்களுக்கான பல்வேறு இலவச அப்பிளிக்கேஷன்கள் காணப்படுகின்றமை அறிந்ததே. இவற்றில் அதிகளவில் விளம்பரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். இவ்வாறான விளம்பரங்களை தடைசெய்வதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருட்களின் (Ad Blocking apps) ஊடாக மொபைல் சாதனங்கள் ரகசியமாகக் கண்காணிக்கப்படுவதுடன், தகவல்கள் திருடப்படுவதை அப்பிள் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதனால் இவ்வாறான அப்பிளிக்கேஷன்களை தனது அப்ஸ் ஸ்டோர் தளத்திலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. இதனை அப்பிள் நிறுவனமே உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எனினும் இவ்வாறு நீக்கப்பட்ட சில அப்பிளிக்கேஷன்களை அப்ஸ் ஸ்டோர் தளத்தில் மீண்டும் பதிவேற்றம் செய்வதற்கான விண்ணப்பங்கள் மீளவும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
Thursday, 31 December 2015
Home
Unlabelled
தகவல்களை திருடும் அப்பிளிக்கேஷன்கள்: அதிரடியில் இறங்கியது அப்பிள்
No comments:
Post a Comment